Throwback : யார் மூத்தவர்?.. நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வயது வித்தியாசத்தை கூகுளில் வலைவீசி தேடிய நெட்டிசன்ஸ்

First Published | May 29, 2023, 12:05 PM IST

காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் வயது வித்தியாசத்தை நெட்டிசன்கள் கூகுளில் வலைவீசி தேடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்தாண்டு ஜுன் மாதம் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு தான் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குனர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், அட்லீ, மோகன் ராஜா உள்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு நயன்தாராவின் திருமணம் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது. குறிப்பாக திருமணம் முடிந்ததும் அவர்களைப் பற்றிய தகவல்களை தான் ரசிகர்கள் அதிகளவில் கூகுளில் தேடினர். அந்த வகையில் நயன்தாரா அணிந்து வந்த புடவை மற்றும் நகை, இவர்கள் திருமணத்திற்காக செய்த மொத்த செலவு என்ன போன்றவற்றை வலைவீசி தேடியுள்ளனர். இவற்றிற்கெல்லாம் மேலாக அவர்கள் தேடிய விஷயம் ஒன்று இருந்தது.

இதையும் படியுங்கள்... அப்போ பும்ரா.... இப்போ யாரு? நிச்சயதார்த்தம் ஆனதாக அறிவித்த அனுபமா பரமேஸ்வரன் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Tap to resize

அது என்னவென்றால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையேயான வயது வித்தியாசம் தான். அந்த சமயத்தில் இதுதான் கூகுள் தேடலில் டாப் இடம் பிடித்து இருந்தது. அப்படி இருவருக்கு எவ்வளவு தான் வித்தியாசம் என தேடிப் பார்த்தால், யன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர் என கூகுளில் காட்டுகிறது. விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பிறந்திருக்கிறார். அவருக்கு 37 வயது ஆகிறது. 

நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 38 ஆகிறது. இதைத்தான் நெட்டிசன்கள் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்கள். இருவரும் அடுத்த மாதம் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாட உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆக உள்ள நிலையில், இன்னும் இவர்களின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடாமல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரெட் ஜெயண்ட் வெளியிட்டும் இந்த நிலைமையா.. பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத கழுவேத்தி மூர்க்கன் - வசூல் நிலவரம் இதோ

Latest Videos

click me!