கலைஞரின் பேரனான அருள்நிதி, தமிழ் திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது கழுவேத்தி மூர்க்கன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கெளதம ராஜ் இயக்க, டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
ஆனால் விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கலை சந்தித்ததால், பாக்ஸ் ஆபிஸிலும் பிக்-அப் ஆகவில்லை. அதன்படி கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகியும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாததால், நாளுக்கு நாள் வசூல் குறைந்த வண்ணமே உள்ளது.