பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ரயிலில் தையா தையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். மலைக்கா அரோராவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதையடுத்து பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார் மலைக்கா அரோரா.
மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 ஆண்டுகள் மூத்தவர் ஆவார். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த ஜோடி ஜாலியாக லவ் பண்ணி வருகிறது. இந்த காதல் ஜோடியின் சமீபத்திய புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் அர்ஜுன் கபூர் படுக்கையறையில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.
இந்த போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், மலைக்கா அரோராவை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட புகைப்படத்தை இப்படி பொதுவெளியில் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். சிலரோ இந்த புகைப்படத்தை பதிவிடும் போது போதையில் இருந்தீர்களா என நடிகை மலைக்கா அரோராவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தை நீக்குமாறும் நடிகை மலைக்கா அரோராவை ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறக்க போகும் ராசி.! தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ராம் சரண்... ஹீரோ யார் தெரியுமா?