மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அனுபமாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா, பின்னர் டோலிவுட்டுக்கு சென்றார்.