தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்த அவர் சக நடிகரான நாக சைதன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிந்து விட்டனர்.