நடிகர் விக்ரமின் 62-வது திரைப்படம் தங்கலான். பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் கேஜிஎப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் உடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
rishab shetty take selfie with vikram
தங்கலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், அப்படத்திற்கான புரமோஷன் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பெங்களூருவில் தங்கலான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் விக்ரம் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது கன்னட திரையுலகில் டிரெண்டிங் ஸ்டாராக இருக்கும் ரிஷப் ஷெட்டி நடிகர் விக்ரமை சந்தித்துள்ளார்.
விக்ரம் உடனான சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில், நடிகனாக வேண்டும் என்று நான் ஆசைப்பட்ட போது எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது விக்ரம் சார் தான். 24 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் என்னுடைய குருவை சந்தித்துள்ளேன். இந்த தருணத்தில் உலகின் மிக அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
44
rishab shetty emotional post about vikram
என்னை போன்ற நடிகர்களை ஊக்குவிப்பதற்கு நன்றி, உங்களின் தங்கலானுக்கும் வாழ்த்துக்கள். லவ் யூ சியான் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த ரிஷப் ஷெட்டி நடிகர் விக்ரமின் மிகப்பெரிய ரசிகனாக இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, அதில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.