பிளாக் கலர் ட்ரான்ஸ்பெரண்ட் உடையில் மயக்கும் தங்கலான் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..

நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

Parvathy Thiruvothu

2006-ம் ஆண்டு வெளியான அவுட் ஆஃப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி திருவோது. இதை தொடர்ந்து மலையாள திரையுலகில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

Parvathy Thiruvothu Latest Pics

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு மற்ற மொழிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2008-ம் ஆண்டு வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பார்வதி. இந்த படத்தில் பார்வதியின் நேர்த்தியான நடிப்பு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது.


Parvathy Thiruvothu

இதை தொடர்ந்து கன்னடம், மலையாள படங்களில் பிசியானார் பார்வதி . தமிழில் சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே மலையாளத்திலும் பல படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக மாறினார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றார்.

Parvathy Thiruvothu Latest Pics

தமிழில் கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களில் அவர் நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் பார்வதி நடித்துள்ளார். 

Parvathy Thiruvothu Latest Pics

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

Latest Videos

click me!