படத்தை ஒழுங்கா எடுக்காம.. கம்பி கட்ற கதையை சொல்ல வேண்டியது.. ரஜினி மகளை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்..

First Published | Aug 6, 2024, 4:07 PM IST

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினி மகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

mazhai pidikatha manithan

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின. எனினும் எந்த படத்திற்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

vijay antony starrer Mazhai Pidikkatha Manithan from today worldwide

இவை தவிர நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, ஜமா என பல சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகின. எனினும் எந்த படம் வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை. 

Tap to resize

release date of Mazhai Pidikkatha Manithan movie starring vijay antony announced

இதில் கடந்த வாரம் வெளியான மழை பிடிக்காத மனிதன் ஓரளவு வசூல் செய்த நிலையில், இந்த படத்தின் மீதான சர்ச்சை பின்னடைவை ஏற்படுத்தியதாகவே கருதப்படுகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த  படத்தில் நடித்துள்ளனர்.

Mazhai Pidikkatha Manithan movie trailer vijay antony

இந்த படம் வெளியான நிலையில் தனக்கு தெரியாமலே படத்தில் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார். விஜய் ஆண்டனி தான் அந்த காட்சியை சேர்த்திருப்பார் என்று கூறப்பட்டது. எனினும் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருந்தார். 

இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “படத்தை ஒழுங்கா எடுக்க சொன்னா... Hard disk தொலஞ்சி போச்சி, எனக்குத்தெரியாம 1 நிமிஷ சீனை சேத்துட்டாங்கன்னு கம்பி கட்ற கதையை சொல்ல வேண்டியது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

Andhagan

மகாராஜா, ராயன் படங்களுக்கு பிறகு தமிழில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் எதுவும் கடந்த வாரம் வெளியாகவில்லை. மழை பிடிக்காத மனிதன் படம் மட்டுமே ஓரளவு வசூல் ஈட்டியது. எனினும் இந்த வாரம் வெளியாக உள்ள அந்தகன் படம் வசூலை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Videos

click me!