தடுக்க யாரும் வரல... தங்கலான் ஆடியோ லாஞ்சில் மேடையிலேயே சண்டை போட்ட மாளவிகா - பார்வதி

Published : Aug 06, 2024, 03:23 PM ISTUpdated : Aug 06, 2024, 03:44 PM IST

தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நாயகிகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் மேடையிலேயே க்யூட்டாக சண்டை போட்டனர்.

PREV
14
தடுக்க யாரும் வரல... தங்கலான் ஆடியோ லாஞ்சில் மேடையிலேயே சண்டை போட்ட மாளவிகா - பார்வதி
Thangalaan team

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், கேஜிஎப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24
malavika mohanan, parvathy

தங்கலான் திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குனர், பா.இரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வது மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... அன்று 750 ரூபா சம்பளம்... இன்று கோடிகளில் புரள்கிறார் - தங்கலான் விக்ரமின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

34
thangalaan audio launch

இந்த விழாவில் பேசிய நடிகை பார்வதி, கங்கம்மாள் கதாபாத்திரத்தில் இருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என கூறி இருக்கிறார். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. இந்தப்படம் எதிர்பாராமல் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸாகவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த படத்திலும் சுதந்திரம் பற்றிய பேச்சுகள் இடம்பெற்றிருக்கின்றன என பேசிய அவர், அப்படத்தின் உதவி இயக்குனர்களால் தான் தன்னால் கங்கம்மாள் கேரக்டரில் நடிக்க முடிந்ததாக கூறினார்.

44
malavika mohanan cute moments with parvathy

இதையடுத்து மேடையேறி பேசிய மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்றிக் காட்டினார். அப்போது யாருடன் சிலம்ப சண்டை போட போகிறீர்கள் என்கிற கேள்விக்கு தங்கலான் விக்ரமுடன் தான் என பதிலளித்தார். அப்போது விக்ரமுக்கு பதில் அவரது மனைவியாக நடித்துள்ள பார்வதி மேடையேறி மாளவிகா உடன் சிலம்ப சண்டை போட்டு அசத்தினார். இருவரின் இந்த க்யூட்டான சிலம்ப சண்டை அந்நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயமாக மாறியது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் உடன் பிரேக் அப்... ஸ்ருதிஹாசன் தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த நடிகை கெளதமி

click me!

Recommended Stories