கமல்ஹாசன் உடன் பிரேக் அப்... ஸ்ருதிஹாசன் தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த நடிகை கெளதமி

First Published | Aug 6, 2024, 2:31 PM IST

கமல்ஹாசன் உடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கெளதமி, அவரை பிரிந்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Gautami, kamalhaasan

சினிமாவில் மட்டுமல்லாத ரியல் லைஃபிலும் காதல் மன்னனாக வலம் வந்தவர் கமல்ஹாசன். அவர் முதலில் நடிகை வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசந்து போனதால், வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் கமல். இந்த ஜோடிக்கு அக்‌ஷரா, ஸ்ருதிஹாசன் என இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே சரிகா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் டைவர்ஸ் பண்ணிவிட்டார் கமல்.

kamal, gautami relationship

இதுதவிர நடிகைகளுடனும் பரவலாக காதல் கிசுகிசுவில் சிக்கியவர் கமல். அவர் முதன்முதலில் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார். இதை கமலே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனது. இதையடுத்து நடிகை சிம்ரன் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதைத் தொடர்ந்து நடிகை கெளதமி உடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் கமல்ஹாசன்.

Tap to resize

Gautami kamal break up

தேவர்மகன் படத்தில் நடித்தபோது கமலுக்கும் கெளதமிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். அந்த சமயத்தில் கமல் திருமணமாகி இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கெளதமி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் இந்தியா வந்துவிட்டார் கெளதமி.

இதையும் படியுங்கள்... பாட்டி ஆனாலும் பியூட்டி குறையல! 55 வயதிலும் அழகு குறையாத அருண் விஜய்யின் அக்கா கவிதா விஜயகுமார் போட்டோஸ்!

kamalhaasan daughters

அதன் பின்னர் கெளதமிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தது கமல்ஹாசன் தான். தன் மீது கமல்காட்டிய அன்பால் நெகிழ்ந்து போன கெளதமி கமலுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தினார். இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்தார் கெளதமி. பிரிவுக்கான காரணத்தை அந்த சமயத்தில் கெளதமி வெளியிடாததால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்று, இவர்கள் பிரிவுக்கு ஸ்ருதிஹாசன் காரணம் என பேச்சு அடிபட்டது.

gautami

அதற்கு கெளதமியே பழைய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அக்‌ஷரா, ஸ்ருதிஹாசன் இருவருமே அற்புதமான பெண்கள், சிறுவயதில் இருந்தே அவர்களை பார்த்து வருகிறேன், எங்கள் பிரிவுக்கு அவர்கள் இருவரும் எந்தவிதத்திலும் காரணம் இல்லை. கமலின் கமிட்மெண்ட் மற்றும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக்கொடுக்க முடியாத காரணத்தால் தான் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என கெளதமி கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 கவுத்திவிட்டதால்... விக்ரம் 2 படத்துக்கு தயாராகிறாரா கமல்? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய போட்டோ

Latest Videos

click me!