கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் விறுவிறுப்பில்லாத திரைக்கதை காரணமாக இந்தியன் 2 திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.140 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது.
24
Maniratnam, Kamal
இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கமல்ஹாசன் அடுத்ததாக தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் கமலுடன் சிம்பு, ஐஸ்வர்யா லெட்சுமி, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் என நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதுதவிர ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு இயக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் கமல், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2 படமும் கமலின் லைன் அப்பில் உள்ளது. இப்படி செம்ம பிசியான நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வரும் கமல், சிவகார்த்திகேயனின் அமரன், சிம்புவின் எஸ்.டி,ஆர் 48 போன்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அதில் அமரன் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
44
kamalhaasan latest photo with a kid
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ஒரு சுட்டிக் குழந்தைக்கு அருகே அமர்ந்து அவரைப்போலவே தொப்பி, கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார் கமல். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விக்ரம் 2-வா இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் விக்ரம் பட கிளைமாக்ஸில் கமல் ஒரு சிறுவனோடு இருக்கும்படியான காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.