கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்! யார் தெரியுமா?

First Published | Aug 6, 2024, 1:11 PM IST

'கார்த்திகை தீபம்' சீரியலில் அதிரடியாக சன் டிவி பிரபலம் என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாசி வரும் ஜனரஞ்சகமான தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் விஜய் டிவி ஆபீஸ் தொடர் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது கிரவுண்ட் ஃபண்டு மூலம், படம் ஒன்றை இயக்க சீரியலில் இருந்து விலகினார். பின்னர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட கார்த்திகை தீபம் தொடரில் இணைந்தார்.
 

karthick raj and arthika

இவருக்கு ஜோடியாக ஆர்த்திகா என்பவர் நடித்து வருகிறார். மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அருணாச்சலம் - அபிராமி ஆகியோரின் மூன்று மகன்களில் ஒருவரான கார்த்திக் தீபாவை திருமணம் செய்யும் சூழல் எப்படி உண்டாகிறது.  இசைஞானம் பெற்ற பாடகியான தீபா, தனக்கு பாட தெரியும் என்பதை கார்த்திக்கிடம் சொல்லாமல் மறைக்க என்ன காரணம்... என யாரும் எதிர்பாராத பல்வேறு திருப்புமுனைகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஓ உனக்கு இவ்வளவு திமிரா? எம்.ஜி.ஆருக்காக ஊழியரை அசிங்கப்படுத்திய நாகேஷ்! கொட்டத்தை அடக்கிய கே.பாலச்சந்தர்!

Tap to resize

அபிராமிக்கு தீபாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனம் இல்லை என்றாலும், விதி கார்த்திக் -தீபாவை ஒன்று சேர்க்கிறது. ஆனால் தற்போது தீபா மற்றும் கார்த்திகை அபிராமி ஏற்றுக்கொள்ளும் நிலையில், தீபாவை கார்த்திக்கிடம் இருந்து பிரிக்க பல சதி வேலைகள் நடக்கின்றன. இவை அனைத்தையும் எதிர்கொண்டு தீபா தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ துவங்குவாரா? மாமியார் குடும்பத்தை தலை நிமிர செய்யப்போவது எப்படி? என்கிற விறுவிறுப்பான கதைகளத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தர்மலிங்கம் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர், வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த தொடர் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியில் அவ்வபோது டாப் 10 லிஸ்டில் இடம் பிடிக்கும் இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

“நைட்டு காரில் தான் தூங்குவேன்..” கமல்ஹாசனை பிரிந்த பின் நடந்ததை நினைவுகூர்ந்த சரிகா..

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர், 'கார்த்திகை தீபம்' தொடரில்,  பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வந்த நந்திதா ஜெனிபர், ரம்யா என்கிற கதாபாத்திரத்தில் இணைந்த நிலையில்... இவரை தொடர்ந்து மற்றொரு கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் தொடரில் கரிகாலனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விமல் கமிட் ஆகியுள்ளார். இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Latest Videos

click me!