அன்று 750 ரூபா சம்பளம்... இன்று கோடிகளில் புரள்கிறார் - தங்கலான் விக்ரமின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

Published : Aug 06, 2024, 12:41 PM IST

தங்கலான் படத்தின் நாயகன் சீயான் விக்ரம் வாங்கும் சம்பளம் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
அன்று 750 ரூபா சம்பளம்... இன்று கோடிகளில் புரள்கிறார் - தங்கலான் விக்ரமின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
vikram

தமிழ் சினிமாவில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடிய நடிகர்கள் வெகு சிலரே, அதில் கில்லாடியாக இருப்பவர் தான் சீயான் விக்ரம். இவரின் ஒரிஜினல் பெயர் கென்னடி. சினிமாவுக்காக தன் பெயரை விக்ரம் என மாற்றிக்கொண்டார். இவரது தாய்மாமா தான் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன், அதாவது நடிகர் பிரசாந்தின் அப்பா. தாய் மாமா சினிமாவில் இருந்தாலும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விக்ரம் அவரிடம் பேசுவதில்லை.

25
chiyaan vikram

பின்னர் சொந்த முயற்சியால் சினிமாவில் முன்னேற முடிவெடுத்த விக்ரம், அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக தோல்வியை தழுவின. சுமார் 10 ஆண்டு கடின உழைப்புக்கு பின்னர் சேது படம் மூலம் முதல் வெற்றியை ருசித்தார் விக்ரம். பாலா இயக்கிய இப்படத்தில் சீயானாக நடித்ததால், அதுவே இவருக்கு அடைமொழியாகவும் மாறியது. சேது படத்தின் வெற்றிக்கு விக்ரமின் கெரியரை தலைகீழாக மாற்றியது.

35
thangalaan vikram

சேது படத்துக்கு பின்னர் அவர் நடித்த தில், தூள், ஜெமினி, சாமி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டாகி அவரின் மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது. பின்னர் மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார் விக்ரம். அப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கமலுக்கு அடுத்தபடியாக எத்தனை வேடங்கள் கொடுத்தாலும் அசால்டாக நடிக்கும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். 

இதையும் படியுங்கள்...23 ஆபரேஷன்... நடக்கவே முடியாதுனு டாக்டர் சொன்னாங்க; வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து - விக்ரம் எமோஷனல் பேச்சு

45
Vikram Salary

ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்கிற வடிவேலுவின் வசனம் விக்ரமுக்கு கச்சிதமாக பொறுந்தும். ஏனெனில் அவர் ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஒல்லியானது மட்டுமின்றி, பின்னர் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறி வியக்க வைத்தார். ஐ படத்துக்கு பின்னர் அவர் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ள படம் தான் தங்கலான். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வர உள்ளது.

55
Vikram Net Worth

இந்த நிலையில், நடிகர் விக்ரமின் சம்பளம் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஒரு படத்துக்கு ரூ.30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம். சென்னையில் விக்ரமுக்கு சொந்தமாக சொகுசு பங்களா ஒன்றும் உள்ளது. இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் இருக்குமாம். இவரிடம் போர்ஸே, டொயோட்டா லேண்ட் குரூஸ்னர், 2 ஆடி கார்கள் என ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன. இவரின் மகன் துருவ் விக்ரமும் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஓ உனக்கு இவ்வளவு திமிரா? எம்.ஜி.ஆருக்காக ஊழியரை அசிங்கப்படுத்திய நாகேஷ்! கொட்டத்தை அடக்கிய கே.பாலச்சந்தர்!

Read more Photos on
click me!

Recommended Stories