
நடிகர் கமல்ஹாசன் முதலில் நடிகையும், கிளாசிக்கல் டான்சருமான வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் வாணி கமல்ஹாசனி காஸ்ட்யூம் டிசைனராக பல படங்களில் பணியாற்றினார். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதை தொடர்ந்து பிரபல நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். சரிகா - கமல்ஹாசன் தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். திருமணத்திற்கு பிறகு சரிகாவும் கமல்ஹாசனின் பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார். குறிப்பாக ஹேராம் படத்திற்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான தேசிய விருதை சரிகா வென்றார். இதை தொடர்ந்து கமல்ஹாசன் - சரிகா தம்பதி 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
எனினும் கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் விவாகரத்து நீண்ட காலமாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக உள்ளது. கமல்ஹாசனை விவாகரத்து செய்த பிறகு, தனது நாட்கள் எப்படி இருந்தது என்பது பற்றி சரிகா நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அதில் பேசிய சரிகா, கமல்ஹாசனை விவாகர்த்து செய்ததை நல்ல முடிவாகவே நான் கருதுகிறேன். எனக்கும் எனது அம்மாவுக்கும் எது நல்லது என்று நினைத்தேனோ அதையே நான் செய்தேன். எங்கள் நலனுக்காக அந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்தது. பல நாட்கள் யோசித்த பின்னரே அந்த முடிவை எடுத்தே. ஒரே இரவில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது.” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனின் வீட்டை விட்டு வெளியேறியபோது, தன்னிடம் ஒரு கார் மற்றும் வெறும் ரூ.60 மட்டுமே இருந்ததாகவும் சரிகா கூறியுள்ளார். மேலும் “ கமல்ஹாசனை பிரிந்த பிறகு எனது அடுத்த நகர்வுக்கான எந்த திட்டமும் இல்லை. ரூ 60 பணம் மற்றும் எனது காருடன் கிளம்பினேன். நான் என் நண்பர்கள் வீட்டிற்குச் சென்றேன், அவர்கள் வீட்டில் குளித்தேன், இரவில், நான் என் காரில் தூங்கினேன்.” என்று கூறியிருந்தார்.
எனினும் மறுபுறம் கமல்ஹாசன் தனது முன்னாள் மனைவி சரிகாவை விவாகரத்து செய்த பின், அவரின் சவாலான சூழ்நிலைகளைப் பற்றி அறிந்திருந்தும், அவருக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறித்து பேசியிருந்தார். அப்போது “ சரிகா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை, அதனால், அவருக்கு உதவி செய்திருந்தால், அவர் வருத்தமடைந்திருப்பார். என்னைப் போன்ற ஒருவர் தனக்கு உதவி செய்வதை அவர் அவமானமாக கருதுவார். நான் அப்போது எந்த உதவி செய்திருந்தாலும் அவரின் நிலைமையை மோசமாக்கும். ஆனால் யாருடைய அனுதாபத்தையும் தேடாதது பெருமையாக இருந்தது, அதற்காக அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.
2005-ம் ஆண்டு முதல் கமல்ஹாசன் கௌதமி உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். எனினும் 2016-ம் ஆண்டு தங்கள் உறவை இருவரும் முறித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.