விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது.
25
chiyaan vikram
தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் பேசுகையில் தன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து பற்றி பேசினார். அவர் பேசியதாவது : 8ம் வகுப்பு முன்னர் வரை முதல் 3 ரேங்க் வாங்குவேன். அதன்பின்னர் நடிக்க ஆசை வந்ததால், படிப்பில் கோட்டைவிட்டுவிட்டேன். கடைசி 3 ரேங்க் தான் வாங்கினேன். நாடகங்களிலும் ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தால் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அதில் எந்த கேரக்டருக்கு அதிகம் நடிக்க ஸ்கோப் இருக்கிறதோ அதை கேட்டு வாங்கி நடிப்பேன்.
கல்லூரியில் சேர்ந்த பின்னர் தான் நடிப்பின் மீது தீவிரமாக இருந்தேன். அப்போது பிளாக் காமெடி என்கிற நாடகத்தில் ஹீரோவாக நடித்ததற்கு எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அன்றைய தினமே நான் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி என் கால் உடைந்துவிட்டது. முதலில் என் காலை வெட்டி எடுக்கணும்னு சொன்னாங்க. அப்புறம் 3 ஆண்டுகள் ஹாஸ்பிட்டலில் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த மூன்று ஆண்டுகளில் 23 சர்ஜரி நடந்தது.
45
vikram speech in thangalaan Audio launch
அதன்பின்னர் நான் எப்போ நடப்பேன்னு என் அம்மா டாக்டர்கிட்ட கேட்டப்போ அவர், அவன் நடக்கவே மாட்டான்னு சொல்லிட்டார். அதையும் மீறி நடந்துவிட்டேன். அதன்பின்னர் சினிமாவில் நடிக்கனும்னு கிறுக்கன் மாதிரி சுத்திட்டு இருந்தேன். சின்ன ரோல் பண்ணாலும் போதும்னு ஆசைப்பட்டேன். மெதுமெதுவா பட வாய்ப்புகள் வந்தது. அதிலும் போராட்டம் இருந்தது. 10 ஆண்டுகள் போராடினேன். அந்த டைம்ல வேலைக்கும் சென்றுகொண்டு இருந்தேன்.
55
thangalaan Audio launch photos
அப்போ எனக்கு மாசம் 750 ரூபா தான் சம்பளம். பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கி அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், ஏன் நடிக்குறனு கேட்டாங்க. ஆனால் என்னால் முடியும் என நம்பினேன். அன்று நான் என் முயற்சிய விட்டிருந்தால், இன்று நான் இந்த மேடையில் இருந்திருக்க மாட்டேன். அப்போ எனக்கு சக்சஸ் கிடைக்கலேனா, இப்பவும் சினிமாவில் முயற்சி செய்துகொண்டு தான் இருந்திருப்பேன் என விக்ரம் கூறினார்.