அந்தகன் முதல் மின்மினி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT ரிலீசுக்காக வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்

First Published | Aug 6, 2024, 10:46 AM IST

பிரசாந்த் நடித்த அந்தகன் முதல் ஹலீதா ஷமீம் இயக்கிய மின்மினி வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Andhagan

அந்தகன்

பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இதில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், வனிதா, சமுத்திரக்கனி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது இந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Minmini

மின்மினி

அந்தகன் படத்துக்கு போட்டியாக ரிலீசாக உள்ள மற்றொரு திரைப்படம் மின்மினி. இப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் சில்லுக்கருப்பட்டி, பூவரசம் பீப்பி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மின்மினி படத்தில் எஸ்தர் அனில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 9ந் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்...இன்று வரை எந்த தமிழ் நடிகையாலும் முறியடிக்க முடியாத சாதனைகளை செய்த K.R.விஜயா! அப்படி என்ன செய்தார்?

Tap to resize

Marimuthu, vela ramamoorthy

சிறு பட்ஜெட் படங்கள்

மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த கடைசி திரைப்படமான வீராயி மக்கள் படமும் இந்த வாரம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் வேலராமமூர்த்தி, மாரிமுத்து இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். இதுதவிர ஸ்ரீ கிருஷ்ணா இயக்கிய லைட் ஹவுஸ், அபர்ணதி கதையின் நாயகியாக நடித்துள்ள நாற்கரப்போர், ஏ.எல்.ராஜா இயக்கிய சூரியனும் சூரியகாந்தியும் ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளன.

Indian 2

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆகிறது. அது வேறெதுவுமில்லை, கடந்த மாதம் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் திரையரங்கில் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்த இந்தியன் 2 திரைப்படம் தான். அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. மற்ற மொழிகளை பொறுத்தவரை மலையாளத்தில் மம்முட்டி நடித்த டர்போ சோனி லிவ் தளத்திலும், நந்தனா சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்திலும், இந்தியில் லைஃப் ஹில் கயி படம் ஹாட்ஸ்டாரிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்...‘கிஸ்’சுக்காக நடந்த சண்டை... விக்னேஷ் சிவனை சைக்கோனு திட்டிய நயன்தாரா - இது எப்போ?

Latest Videos

click me!