‘கிஸ்’சுக்காக நடந்த சண்டை... விக்னேஷ் சிவனை சைக்கோனு திட்டிய நயன்தாரா - இது எப்போ?

First Published | Aug 6, 2024, 8:52 AM IST

கோலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டையிட்ட சம்பவம் குறித்து பார்க்கலாம்.

Nayanthara, vignesh shivan

நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி சுமார் 7 ஆண்டுகள் காதலித்து அதன் பின்னர் தான் திருமணம் செய்துகொண்டனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தபோது தான் அவர் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா.

Nayanthara husband Vignesh Shivan

ஷூட்டிங் சமயத்திலேயே இருவரும் சீக்ரெட்டாக காதலித்து வந்துள்ளனர். அந்த படத்தில் பணியாற்றிய ராதிகாவுக்கே இவர்களது காதல் விஷயம் இறுதியில் தான் தெரியுமாம். பின்னர் இருவரது லவ் மேட்டரும் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து விருது விழாக்கள் மற்றும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொள்ள தொடங்கியது விக்கி - நயன் ஜோடி.

Tap to resize

Nayanthara Vignesh Shivan photos

அதிலும் குறிப்பாக சைமா விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற நயன்தாரா, அப்போது மேடையில் அவ்விருதை வழங்க வந்த அல்லு அர்ஜுனிடம், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் கையால் விருதை வாங்க விரும்புவதாக கூறி, விக்கியை மேடைக்கு வர வைத்து அவர் கையால் விருது வாங்கினார்.

இதையும் படியுங்கள்... கட்டதுரை மகனுக்கு கல்யாணம்... களைகட்டிய ஷாரிக்கின் ஹல்தி பங்க்‌ஷன் - வைரலாகும் போட்டோஸ் இதோ

Nayanthara Vignesh Shivan romantic photos

பின்னர் ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டுகெதராக சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். அதுமட்டுமின்றி அடிக்கடி ஜோடியாக வெளிநாட்டுக்கும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்படி காதல் புறாக்களாக வலம் வந்த விக்கி - நயன் இடையே நடந்த குட்டி சண்டை குறித்து தற்போது பார்க்கலாம்.

vijay sethupathi, nayanthara

நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் சமயத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தபோது, நயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையேயான முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்ததாம். அதை மாற்றி கூட எடுத்துக் கொள்ளலாம் என நயன்தாரா சொன்னாராம். ஆனால் சீன் கரெக்டாக வர வேண்டும் என்பதற்காக அதை படமாக்கும் போது இன்னும் கிட்ட வாங்க, கிட்ட வாங்கனு சொல்லிகிட்டே இருந்தாராம் விக்கி. இதனால் டென்ஷன் ஆன நயன்தாரா, விக்னேஷ் சிவன் அருகில் வந்து சைக்கோனு சொல்லி திட்டிவிட்டு சென்றாராம். வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்ததாக விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... டோலிவுட்டில் கிளுகிளுப்பாக என்ட்ரி கொடுத்த ஜான்வி கபூர் - தாறுமாறாக வைரலாகும் தேவாரா இரண்டாம் சிங்கிள்!

Latest Videos

click me!