Shriya Saran: 40 வயதை கடந்த போதிலும் கவர்ச்சியில் துளியும் குறை வைக்காத ஸ்ரேயா சரண்

First Published | Aug 5, 2024, 11:02 PM IST

நடிகை ஸ்ரேயா சரண் கவர்ச்சி பொங்க அண்மையில் எடுத்துக்கொண்ட போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

ஸ்ரேயா சரண்

1982ம் ஆண்டு ஹரித்வாரில் பிறந்த நடிகை ஸ்ரேயா சரணுக்கு தற்போது 41 வயதாகிறது. மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா கடந்த 2001ம் ஆண்டு "இஷ்டம்" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

ஸ்ரேயா சரண்

பின்னர் இந்தி மொழியில் அறிமுகமான இவருக்கு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருப்பார். அதன் பிறகும் தொடர்ச்சியாக இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 

Tap to resize

ஸ்ரேயா சரண்

இந்த சூழ்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "மழை" திரைப்படத்தில் கதாநாயகியாக அசத்தியிருப்பார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், விக்ரம், தனுஷ் மற்றும் ஜீவா உள்ளிட்ட நடிகர்களுடைய நடிப்பில் வெளியான பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா சரண்

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்ட்ரே கோஷீவ் என்பரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் இன்றளவும் கவர்ச்சி குறையாமல் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் வெளியிட்டும் வருகின்றார்.

Latest Videos

click me!