கட்டதுரை மகனுக்கு கல்யாணம்... களைகட்டிய ஷாரிக்கின் ஹல்தி பங்க்‌ஷன் - வைரலாகும் போட்டோஸ் இதோ

Published : Aug 06, 2024, 07:35 AM IST

நடிகர் ரியாஸ் கானின் மகனும் பிக்பாஸ் பிரபலமுமான ஷாரிக் ஹாசனின் திருமண விழா ஹல்தி பங்க்‌ஷன் உடன் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது.

PREV
18
கட்டதுரை மகனுக்கு கல்யாணம்... களைகட்டிய ஷாரிக்கின் ஹல்தி பங்க்‌ஷன் - வைரலாகும் போட்டோஸ் இதோ
shariq - maria

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் ஷாரிக் ஹாசன். இவர் அந்நிகழ்ச்சியில் 49வது நாளில் எவிக்ட் ஆனார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஷாரிக்.

28
shariq haasan wedding

ஷாரிக் ஹாசனின் தந்தை ரியாஸ் கான், தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கி வருகிறார். வின்னர் படத்தில் கட்டதுரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன ரியாஸ் கான், பின்னர் விஜய்யுடன் பத்ரி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.

38
shariq haldi function

ஷாரிக்கின் தாயார் உமா ரியாஸும் கோலிவுட்டில் நடிகையாக வலம் வருகிறார். இவர் மெளன குரு திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார்.

48
uma riyaz khan son shariq

அப்பா, அம்மா இருவருமே சினிமாவில் இருந்தாலும், சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடி வருகிறார் ஷாரிக். அவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... Shriya Saran: 40 வயதை கடந்த போதிலும் கவர்ச்சியில் துளியும் குறை வைக்காத ஸ்ரேயா சரண்

58
shariq - maria haldi function

பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின்னர் ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார் ஷாரிக். அப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

68
shariq hassan

இந்த நிலையில், நடிகர் ஷாரிக் ஹாசன் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். அவர் மரியா என்பவரை வருகிற ஆகஸ்ட் 8ந் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

78
Bigg Boss Fame shariq

ஷாரிக் - மரியா ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டி உள்ளன. அவர்களின் ஹல்தி பங்க்‌ஷன் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

88
shariq Haldi Function Photos

ஹல்தி பங்க்‌ஷனின் போது மஞ்சள் நிறத்தில் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து ஷாரிக்கும், மரியாவும் லிப்கிஸ் கொடுத்து ரொமான்ஸ் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மஞ்சுமல் பாய்ஸ்.. சண்டையிட்டு காசு வாங்கும் இசைஞானி - ஆனா அன்று ஒரு பைசா பெறாமல் ஹிட் தந்த இளையராஜா! List இதோ!

click me!

Recommended Stories