பிலிம் ஃபேர் விருது விழாவிற்கு பட்டு சேலையில்... தேவதை போல் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! போட்டோஸ்!

First Published | Aug 5, 2024, 8:48 PM IST

69-ஆவது பிலிம் ஃபேர் ஷோபா விருதுகள் நேற்று வழங்கப்பட்ட நிலையில், விருது விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பட்டு சேலையில் கலந்து கொண்டார். இதுகுறித்த போட்டோஸ் இதோ...
 

கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்கள், நடிகர் - நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பல துறையை சேர்ந்தவர்களுக்கு நேற்று ஹைதராபாத்தில் விருது பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி  வருகிறது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய பிரபலங்களுக்கு 69-ஆவது ஃபிலிம் பேர் ஷோபா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழில் சிறந்த படமாக சித்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில், சிறந்த நடிகராக சித்தா பட நாயகன் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த விக்ரமும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதே போல் சித்தா பட நாயகி நிமிஷா விஜயன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

அக்கா கவிதா பாண்டியன் பிறந்தநாளுக்கு... குடும்பத்தோடு சேர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

Latest Videos


சித்தா திரைப்படம் மட்டுமே அதிக பட்சமாக 6 விருதுகளை வென்றது. அதே போல் சிறந்த துணை நடிகருக்கான விருது, மாமன்னன் படத்தில் நடித்த, பஹத் பாசிலுக்கு வழங்க பட்டது.சிறந்த துணை நாடியகையாக சித்தா படத்தில் நடித்த அஞ்சலி நாயர் தேர்வானார். அதே போல் சிறந்த நடிகை (கிரிட்டிக்ஸ்) என்கிற பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஃபர்ஹானா' படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.

விருதை பெறுவதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ்... பிங்க் நிற பட்டு சேலையில் தேவதை போல் வந்திருந்தார். தற்போது பிலிம் ஃபேர் நிகழ்ச்சியின் பொது எடுக்கப்பட்ட சில போட்டோ ஷூட் புகைப்படங்களை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

அண்ணா சீரியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் வெளியேறுகிறார்களா?

ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்படும் இந்த பிலிம் ஃபேர் விருது, மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாமன்னன், விடுதலை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் அந்த படங்களுக்கு விருது கிடைக்காதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

click me!