அண்ணா சீரியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் வெளியேறுகிறார்களா?

First Published | Aug 5, 2024, 7:25 PM IST

ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அண்ணா சீரியலில் இருந்து... இரண்டு முக்கிய பிரபலங்கள் வெளியேற உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து உண்மை என்ன என்பதை சீரியல் குழு தெரிவித்துள்ளது.
 

Anna Serial

அண்ணன் - தங்கைகளுக்குள் இருக்கும் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'அண்ணன்' தொடரில் இருந்து முக்கிய நடிகர் - நடிகை வெளியேறப் போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது அது முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
 

Anna Serial Is Brother and Sister concept:

சித்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், பெருபாலும் பாசத்தை மையமாகக் கொண்ட சீரியல்களாக இருந்தாலும், ஒவ்வொரு சீரியலிலும் ஏதேனும் தனித்துவம் இருக்கும். அந்த வகையில் அம்மா - பையன், அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை போன்ற பாசக் கதைகள் வெளியாகி சின்னத்திரையில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆத்தி... பிலிம் ஃபேர் நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை இத்தனை லட்சமா? ஷாக் ஆகிடாதீங்க !
 

Tap to resize

Sentiment serial;

செண்டிமெண்ட் ஒரே மாதிரியானது என்றாலும், சீரியலை கொண்டு செல்லும் விதம் தான் ஒரு தொடரின் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்கிறது, அந்த வகையில் தற்போது அண்ணன் மற்றும் நான்கு தங்கைகளுக்கு இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்தும், பகை, கோபம், காதல், போன்ற பல அம்சங்கள் சேர்ந்த ஜனரஞ்சகமான தொடராக ஒளிபரப்பாகி வருகிறது 'அண்ணா சீரியல்'.

Senthil and Nithya ram

இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில், (சண்முகம்) என்னும் ஹீரோக்கதாபாத்திரத்திலும், நித்யா ராம் (பரணி) ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் பூவிலங்கு மோகன், ப்ரீத்தா சுரேஷ், சத்யா சுனிதா, விஜே தாரா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மருத்துவரான சகோதரியின் கணவரை 'ராயன்' படத்தில் நடிகராக மாற்றிய தனுஷ்! புகைப்படத்தோடு நன்றி தெறித்த கார்த்திகா!

Rumour Clarified:

500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், அவ்வபோது டாப் 10 TRP பட்டியலிலும் இடம்பெறுவது உண்டு. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ஒரே சமயத்தில் செந்தில் மற்றும் நித்யா ராம் விலக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இருவரின் ஜோடிக்கும் பல ரசிகர்கள் உள்ள நிலையில்... இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறுவது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதை சீரியல் குழு தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!