நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்த நடிகைகள் அப்புறம் எப்படி ஆயிட்டாங்க! மேக்கப் இல்லாத போட்டோஸ்..

நடிகை மேக்கப் போடாமல் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா?

Star Heroines

நடிகைகள் பெரும்பாலும் திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் போட்டு நடிக்கின்றனர். அதே போல் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மேக்கப் இல்லாமல் எந்த நடிகையும் கலந்து கொள்வதில்லை. எப்போது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்றே ஹீரோயினகள் விரும்புவார்கள். ஆனால் நடிகை மேக்கப் போடாமல் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? மேக்கப் இல்லாமல் இருக்கும் தமிழ் நடிகைகளின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா :

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது அவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


த்ரிஷா :

நடிகை த்ரிஷா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதிக ஆண்டுகள் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். சவுத் குயின் என்று அழைக்கப்படும் த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தா. த்ரிஷா நடித்துள்ள பிருந்தா வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. அவர் தற்போது விடாமுயற்சி தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். 

சமந்தா :

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக குஷி என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த சமந்தார். தற்போது சிட்டாடல் என்ற ஹிந்தி வெப் சீரிஸில் நடித்து வருகிறார். 

அனுஷ்கா :

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் அனுஷ்கா. தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி உள்ள அனுஷ்கா கடைசியாக மிஸ் ஷெட்டி, மிசஸ் பாலிஷெட்டி படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னா :

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கடைசியாக அரண்மனை 4 படத்தில் தமன்னா நடித்திருந்தார். தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களை தமன்னா கைவசம் வைத்திருக்கிறார்.

சினேகா :

2000-களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா கடைசியாக ஷாட் பூட் த்ரீ என்ற குழந்தைகள் படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார். 

ஜோதிகா :

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா திருமணத்திற்கு பின் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். 

நஸ்ரியா : 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நஸ்ரியா, நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் கடைசியாக அண்டே சுந்தரநிகி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தற்போது சூக்‌ஷ்மாதர்ஷினி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சூர்யா 43 படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!