தமிழ் சினிமாவில், அப்பா ஒரு இயக்குனர் என்பதால்... சினிமாவில் ஒரு இயக்குனராக நுழைவது செல்வராகவனுக்கு, நடிகராக தனுஷுக்கும் எளிமையானதாக இருந்தாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது இவர்களின் திறமையால் மட்டுமே. செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் தனுஷுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பன்முக திறமையாளராக இருக்கும் தனுஷ், தன்னுடைய 50-ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் தனுஷின் சகோதரி கார்த்திகாவின் கணவர் கார்த்திக் ஆஞ்சியும் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். இதுகுறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு... மிகவும் பெருமை கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இந்த பதிவில், ராயன்... கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்தப் புகைப்படங்களை பதிவிடவும், எனது மகிழ்ச்சியை எனது இன்ஸ்டா குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவும் காத்திருந்தேன். டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன் அனைவராலும் நன்கு அறியப்பட்ட இருதயநோய் நிபுணர் என்பது தெரிந்ததே. அவர் தனது அற்புதமான மருத்துவ திறமை மற்றும் நிர்வாகத்திற்காக அறியப்படுபவர். ஆனால் அவர் தனது சகோதரரின் 50 வது படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று என் அண்ணனிடமிருந்து எனக்கு செய்தி கிடைத்தபோது, அவர் எப்படி நடித்திருப்பார் என கொண்டிருந்தேன்.
ஜோதிகா முதல்... கீர்த்தி சுரேஷ் வரை! ஃபிலிம் பேர் 2024 விருது விழா மேடையை அலங்கரித்த பிரபலங்கள்! போட்டோஸ்!
அவரின் நடிப்பை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், காரணம் என் வாழ்நாளில் என் கணவரை பெரிய திரையில் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. அதுவும் ஒரு நல்ல பாத்திரத்தில்.. அஞ்சி ஒரு நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்க்கு என்னுடைய அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்று நான் மகிழ்ச்சியான சகோதரியாகவும் மகிழ்ச்சியான மனைவியாகவும் உணர்கிறேன். அனைத்து உந்துதலுக்கும் ராயன் குழுவிற்கு நன்றி.. உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவிற்கும் சிறப்பு நன்றி என எடிட்டர் பிரசன்னாவுக்கு இந்த மறக்கமுடியாத அனுபவத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி என தனுஷுக்கும் கூறியுள்ள கார்த்திகா, கணவர் கார்த்திகேயனை திரையில் பார்க்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.