இப்படி ஒரு பெண் கிடைத்தால் போதும்.. 2-வது திருமணம் குறித்து நடிகர் பிரசாந்த் சொன்ன குட்நியூஸ்..

நடிகர் பிரசாந்த் தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

Actor Prashanth

நடிகரும் இயக்குனருமான தியாகராஜனின் மகன் தான் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார். 90களில் விஜய், அஜித் எல்லாம் முன்னணி நடிகராக மாற முயற்சித்து கொண்டிருந்த போது பிரசாந்த் படு பிசியான நடிகராக வலம் வந்தார். மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருந்த அவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். 

Actor Prashanth

ஒரு கட்டத்தில் அவரின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் அவர் சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் சினிமாவி இருந்த தடமே தெரியாமல் காணாமல் போனார். 


Actor Prashanth

இந்த நிலையில் அந்தகன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் பிரசாந்த். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக்காக உருவாகிஉ உள்ள அந்தகன் படத்தை அவரின் தந்தை தியாகராஜனே இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Actor Prashanth

இந்த படம் இந்த மாதம் 15-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரோஷன் பணிகளில் தற்போது பிரசாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Actor Prashanth

அந்தகன் படத்தின் ட்ரெயிலர், பாடல் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு கம் பேக் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Actor Prashanth

பிரசாந்த் 2-வது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் அந்தகன பட புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்திடம் 2-வது திருமணம் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாந்த் திருமணம் என்பது கண்டிப்பாக நடக்கும். நான் ஓ.கே சொல்லிவிட்டு ரெடியாக தான் இருக்கிறேன். என்னை புரிந்து கொள்ளும்படி பெண் கிடைத்தால் போதும். திருமணம் செய்ய நான் ரெடி தான்” என்று தெரிவித்தார். 

Actor Prashanth

நடிகர் பிரசாந்த் கடந்த 2005-ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளனர். எனினும் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பதும் அதை மறைத்து அவர் பிரசாந்தை திருமண செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!