இந்நிலையில் இப்படம் 69ஆவது சோபா ஃபிலிம் விருது நிகழ்ச்சியில், சுமார் 6 விருதுகளை அள்ளியுள்ளது. அதன்படி 'தசரா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நானிக்கும், சிறந்த ஹீரோயினுக்கான விருது கீர்த்தி சுரேஷுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சத்யம் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இதை தவிர, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளராக கொள்ள அவினாஷுக்கும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது ஸ்ரீகாந்த் ஒடிலாவுக்கும் கிடைத்துள்ளது.