பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. மீண்டும் சிங்கிளாக மாறிட்டேன்.. பீஸ்ட் பட நடிகர் உருக்கம்..

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அந்த நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

Shine Tom Chacko

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷைன் டைம் சாக்கோ. நம்மாள் என்ற படத்தின் மூலம் அவர் மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். குனச்சித்திர நடிகர், வில்லன், ஹீரோ என பல கேர்க்டர்களிலும் அவர் நடித்துள்ளார். 

Shine Tom Chacko

மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த ஷைன் டாம், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்தார்.


Shine Tom Chacko

இதை தொடர்ந்து நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா படத்தில் அவர் நடித்திருந்தார். இதன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார் ஷைன் டாம் சாக்கோ.

Shine Tom Chacko

இவருக்கு தபீதா மேத்யூ என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். எனினும் கருத்து வேறுபாடு காரனமாக மனைவியை விவாகரத்து செய்தார் ஷைன் டாம் சாக்கோ. 

Shine Tom Chacko

இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியான தனுஜா என்ற மாடல் அழகியை கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்தார். இந்த ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

Shine Tom Chacko

ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் ‘மீண்டும் சிங்கிள்’ என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த உறவு இப்போது முடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.

Shine Tom Chacko

தொடர்ந்து பேசிய அவர் “ நான் ஒரு உறவில் இருந்ததாகக் கூறினார், ஆனால் அது இப்போது முடிந்துவிட்டது. என்னால் உறவை நிலைநாட்ட முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. நீங்கள் ஒருவரை விரும்புவதால் மட்டும் ஒருவருடன் இருக்க முடியாது. நான் அவரை உண்மையாக தான் காதலித்தேன், ஆனால் அது டாக்ஸிக் ஆக என மாறிவிட்டது என்றும் கூறினார். 

Shine Tom Chacko

ஷைன் டாம் சாக்கோ தற்போது ஹரிதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானாரா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ரஃபி வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ, சின்னு சாந்தினி, தீப்தி சதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!