40 வயதை கடந்தும் செம்ம யங்காக இருக்கும் கவிதா பாண்டியனுக்கு, 13 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கவிதா பாண்டியன் பிறந்தநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது கவிதா பாண்டியனின் கணவர், மகள், தந்தை, தாய், தங்கை கீர்த்தி பாண்டியன், மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் கவிதாவுக்கே தெரியாமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை கவிதா பாண்டியன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தன்னுடைய மற்றொரு சகோதரியான கிரண் பாண்டியனை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். மேலும் ரசிகர்களும் இவருக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.