மஞ்சுமல் பாய்ஸ்.. சண்டையிட்டு காசு வாங்கும் இசைஞானி - ஆனா அன்று ஒரு பைசா பெறாமல் ஹிட் தந்த இளையராஜா! List இதோ!
Isaignani Ilayaraja : தமிழ் திரையுலகின் பெருமையாகவும், உலக இசையின் அடையாளமாகவும் திகழும் மாமேதை தான் இசைஞானி இளையராஜா.
SPB and janaki
தமிழ் திரையுலகை பொருத்தவரை எத்தனையோ இசை ஜாம்பவான்கள் கொடிகட்டி பறந்தாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாமேதை இசை ஞானி இளையராஜாவின் இசை தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட அவர், இன்று உலகையே தன் இசையால் அளந்துள்ளார் என்றே கூறலாம்.
'வாழை' படத்தில் இருந்து வெளியான ஒத்த சட்டி சோறு... 3-ஆவது லிரிக்கல் பாடல்!
ilayaraja
கடந்த 1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இசைஞானி இளையராஜா, 1979ம் ஆண்டு, அதாவது அவர் அறிமுகமான வெறும் 3 ஆண்டுகளில் தனது நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திரைப்படங்களுக்கு இசையமைத்து முடித்த இளையராஜா, சுமார் 1000 திரைப்படங்களில், 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
ilayaraja songs
அவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட மெட்டுக்கள் கூட, இந்த 2024ம் ஆண்டிலும் அவ்வளவு புதிதாக இருப்பதற்கு அந்த இசைஞானியின் ஞானமே காரணம் என்றால் அது மிகையல்ல. இருப்பினும் கடந்து சில ஆண்டுகளாகவே, காப்புரிமை என்கின்ற விஷயத்தில் இளையராஜாவின் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. இசை ஞானியாக இருந்த அவர், தற்பொழுது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்ததே.
manjummel boys
அண்மையில் கூட ரஜினிகாந்தின் "கூலி" படத்தில் தனது பாடல்கள், உரிய அனுமதியின்றி உபயோகிக்கப்பட்டுள்ளதாக அவர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் 200 கோடி வசூல் செய்த மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பியது அனைவரும் அறிந்ததே. அந்த பிரச்சனை இன்றளவும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
music director ilayaraja
இன்று இவ்வளவு கரராக தனது பாடல்களுக்கான காப்புரிமையை மேற்கோள்காட்டி நஷ்டஈடு பெற்று வரும் இளையராஜா, பி. வாசு, மணிவண்ணன், சங்கிலி முருகன் மற்றும் பிரதாப் போத்தன் போன்ற முன்னணி இயக்குனர்களின் முதல் திரைப்படத்திற்கு ஒரு பைசா கூட வாங்காமல் இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது பல ஆண்டுகள் கழித்து அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.