அதாவது நடிகர் நாகேஷும், இயக்குனர் கே பாலச்சந்தரும்... இயக்குனர் - நடிகர் என்பதை தாண்டி, சிறந்த நண்பர்களாக இருந்தனர். கே.பாலச்சந்தர் 1972-ஆம் ஆண்டு, நடிகர் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ நடிப்பில் இயக்கிய திரைப்படம் 'வெள்ளிவிழா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் நாகேஷ் தானாம். சில காட்சிகளில் நடித்த பின்னர் இவரை கே.பாலச்சந்தர் வெளியேற்ற காரணமே நாகேஷின் ஊழியரை அசிங்கப்படுத்திய சம்பவம் தான்.