பாட்டி ஆனாலும் பியூட்டி குறையல! 55 வயதிலும் அழகு குறையாத அருண் விஜய்யின் அக்கா கவிதா விஜயகுமார் போட்டோஸ்!

First Published | Aug 6, 2024, 2:08 PM IST

நடிகையும், விஜயகுமாரின் மூத்த மகளுமான கவிதா விஜயகுமார் தன்னுடைய தங்கை அனிதாவுடன் விடுமுறையை கொண்டாடியபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Veteran Actor Vijayakumar

தமிழ் சினிமாவில், தன்னுடைய இளம் வயதில் அறிமுகமாகி ஹீரோவாக சில படத்திலும், குணச்சித்திர வேடத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, விஜயகுமார் இரண்டு திருமணம் செய்து கொண்டார்.

Vijayakumar Getting 2 marriage

இவரின் மூத்த மனைவி, நெருங்கிய உறவினர் பெண்ணான முத்துக்கன்னு, இரண்டாவது மனைவி பிரபல நடிகை மஞ்சுளா. முதல் மனைவி மூலம் இவருக்கு அருண் விஜய் என்கிற மகனும், கவிதா - அனிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Tap to resize

Vijayakumar Children's:

இரண்டாவது மனைவியான, மறைந்த நடிகை மஞ்சுளா மூலம் வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களின் வனிதா மட்டுமே குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

Vijayakumar Daughter Doctor Anitha:

விஜயகுமார் குடும்பத்தில், அனிதா ஒரு மருத்துவர் என்பதால் எந்த படங்களிலும் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினார். பெற்றோரின் ஆசை படி மருத்துவர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டு லண்டனில் குடியேறினார்.

Vijayakumar First Daughter Kavitha:

கவிதா, சரத்குமாரின் தங்கையாக 'கூலி' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் ஹீரோயினாக நடிக்க சில வாய்ப்புகள் வந்த போதும் அதனை தவிர்த்து விட்டு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார்.

Kavitha is an Actor:

திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆன இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், தங்களின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Kavitha Recent Photos:

அந்த வகையில் தற்போது... கவிதா - அனிதா இருவரும் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அவை வைரலாகி வருகின்றன. அனிதா ஏற்கனவே ஒர்க் அவுட் டயட் என தன்னை பிட்டாக வைத்து கொண்டுள்ள நிலையில், அனிதாவையே மிஞ்சும் விதத்தில் உள்ளார் அவரின் சகோதரி கவிதா.

Kavitha Enjoy with friends:

55 வயதாகும் கவிதா, பேரன் - பேத்திகள் எடுத்து விட்ட பின்னரும் 25 வயது பெண் போல் யங் லுக்கில்... மாடர்ன் உடையில் விதவிதமாக போட்டோஸ் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!