வருண் குறித்து பேசிய சமந்தா!
அண்மையில், Citadel : Honey Bunny டீஸர் வெளியிடப்பட்டது. அப்போது, வருண் தவான் குறித்து பேசிய சமந்தா, வருண் எப்போது சிரித்த முகத்துடன் இருப்பார் என்றும், ஒவ்வொரு காட்சியையும் எப்படி சிறப்பாக நடிப்பது என்பது உட்பட கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது பணியில் எப்போதும் ஒருவித அர்ப்பணிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர் என்றார்.
வருண் தவானின், அற்புதமான நகைச்சுவை உணர்வும் நேர்மறை மனப்பான்மையும் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். Citadel : Honey Bunnyயில் அவர் தனது கதாபாத்திரத்திற்கு முற்றிலும் புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார் என்றார்.