அடங்காத அசுரனுக்கு அடித்த ஜாக்பாட்... மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இணையும் தனுஷ்?

Published : Aug 07, 2024, 08:51 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷுக்கு தற்போது ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
அடங்காத அசுரனுக்கு அடித்த ஜாக்பாட்... மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இணையும் தனுஷ்?
raayan dhanush

கோலிவுட்டில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார் தனுஷ். தமிழில் ஒரு பிரேமலு படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

24
dhanush next movie

இதுதவிர அவர் நடிப்பில் தற்போது இளையராஜா பயோபிக் உருவாகிறது. அப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். அதேபோல் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. அதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் இந்தியிலும் ஒரு படத்தை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். அப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வர முடியாத அளவுக்கு பிசியா? அப்படி எத்தனை படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்? அவரின் லைன் அப் இதோ

34
Avengers

இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே ஜர்னி ஆஃப் பகீர், தி கிரே மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவெஞ்சர்ஸ் டோம்ஸ்டே படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் தான் அவெஞ்சர்ஸ் டோம்ஸ்டே படத்தையும் இயக்க உள்ளார்களாம்.

44
Dhanush with Russo Brothers

இதன்மூலம் நடிகர் தனுஷ் மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்வெல் படங்களின் ஒரு அங்கமாக தான் இந்த அவெஞ்சர்ஸ் டோம்ஸ்டே படம் உருவாக உள்ளதாம். அவெஞ்சர்ஸ் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்கிற தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதோடு, அதன் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஆபத்தை உணராமல்... அந்தமானுக்கு போய் இரண்டே நாளில் அடித்து பிடித்து ஊர் திரும்பிய கார்த்திக் சுப்புராஜ்! ஏன்?

Read more Photos on
click me!

Recommended Stories