OTT : காதலும்... துரோகமும்; ஓடிடியில் சக்கைப்போடு போடும் மலையாள த்ரில்லர் படம் - கதை என்ன தெரியுமா?

Published : Jul 18, 2026, 02:00 PM ISTUpdated : Jul 18, 2026, 02:03 PM IST

OTT Must Watch Movie : ஓடிடியில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அப்படி மலையாளத்தில் வெளிவந்த ஒரு த்ரில்லர் படத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம்.

PREV
14
OTT Must Watch Movie

ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மொழி எல்லைகளைத் தாண்டி திரைப்படங்களை ரசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மலையாள சினிமாவில் வெளியாகும் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைக்களம் கொண்ட படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், காதல், துரோகம், குற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு மலையாள திரைப்படம் தற்போது ஓடிடியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு பார்க்கக் கிடைக்கும் இந்த படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை குறைக்காமல் நகர்கிறது.

24
படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரங்கள் ஷைனி மற்றும் ரெஜி என்ற தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக ரெஜி நகரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் வீட்டிற்கு பணம் அனுப்புகிறார். இதற்கிடையில், ஷைனி தனது மகன் மற்றும் வயதான மாமியார், மாமனாருடன் கிராமத்தில் வசித்து வருகிறார். மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஷைனிக்கு வருகிறது. வெளியில் பார்க்கும்போது அமைதியான குடும்பமாகத் தோன்றினாலும், ஷைனியின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒரு ரகசியம் இருக்கிறது.

34
துரோகம் செய்யும் மனைவி

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது பழைய நண்பரான கிரணுடன் ஷைனி நெருக்கமான உறவில் ஈடுபடுகிறார். இந்த உறவு மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரியவர, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பதற்றம் அதிகரிக்கிறது. இதையடுத்து, தங்களது உறவுக்கு தடையாக இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், ஷைனியும் கிரணும் ஒரு அதிர்ச்சி தரும் முடிவை எடுக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டம் எதிர்பாராத விதமாக திருப்பம் பெறுகிறது.

ஒரு கட்டத்தில், இருவரின் சதித் திட்டத்தையும் மாமனார் அறிந்துகொள்கிறார். அதன்பிறகு நிகழும் சம்பவங்கள் கதையை முழுமையாக மாற்றி விடுகின்றன. ஷைனியும் கிரணும் தங்களது திட்டத்தில் வெற்றி பெற்றார்களா? உண்மை இறுதியில் யாருக்கு சாதகமாக அமைந்தது? என்பதற்கான பதிலை படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

44
எங்கு பார்க்கலாம்?

நம்ம எல்லாருமே நாகரிகமானவங்க கிடையாது. நமக்குள்ள ஆசைகள், கோபங்கள், வன்மங்கள்னு பல விஷயங்களை அடக்கி வெச்சிருக்கோம். அதுதான் நம்மளோட உண்மையான 'உடல்'. அந்த மிருக குணம் எப்போ வேணும்னாலும் வெளிய வரலாம். அப்படி ஒரு சூழல் வந்தா என்ன ஆகும்? இந்த கேள்வியைத்தான் ரதீஷ் ரகுநந்தன் இயக்கிய 'உடல்' படம் நம்ம முன்னாடி வைக்குது. மனித மனசோட ஆழத்துக்கும், உணர்ச்சிகளோட உச்சத்துக்கும் நம்மள கூட்டிட்டுப் போற ஒரு மிரட்டலான அனுபவம் இந்தப் படம். இந்த படத்தில் துர்கா கிருஷ்ணா, தயான் ஸ்ரீனிவாசன், இந்திரன்ஸ், ஜூடே ஆண்டனி ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கு. இப்படத்தை ரதீஷ் ரகுநந்தன் இயக்கி இருக்கிறார். கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

'உடல்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. குடும்ப உறவுகள், துரோகம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த படங்களை விரும்புபவர்கள் இந்தப் படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories