Arulvaan vs Anbe Diana Day 1 Box Office Collection : அருள்வான் படத்துக்கு போட்டியாக அன்பே டயானா படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.
Arulvaan vs Anbe Diana Day 1 Box Office Collection
தமிழ் சினிமாவில் 'ஜமா' படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், தனது அடுத்த முயற்சியாக இயக்கியும் நடித்தும் உருவாக்கியுள்ள படம் 'அன்பே டயானா'. திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக படக்குழு பல்வேறு நகரங்களில் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்த அளவிலான வசூல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வருகை குறைவாக இருந்ததோடு, வசூலும் கம்மியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24
அன்பே டயானா வசூல் நிலவரம்
கலப்புத் திருமணத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், படம் பார்த்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல கருத்துகளைப் பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.5 கோடி செலவில் உருவாகியுள்ளதாக கூறப்படும் 'அன்பே டயானா', முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
34
வசூல் குறைந்ததற்கு காரணம் என்ன?
இந்த குறைந்த வசூலுக்கு, கடந்த வாரம் வெளியான பல படங்களின் போட்டி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி 2, இதயம் முரளி மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி போன்ற படங்கள் அதிக திரைகளில் வெளியானதால், 'அன்பே டயானா' குறைந்த எண்ணிக்கையிலான திரைகளையே பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிப்பதே படத்தின் அடுத்தகட்ட பயணத்திற்கு முக்கியமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
இதற்கிடையில், நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'அருள்வான்' திரைப்படமும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'தேன்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ஜான் விஜய் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
வெளியான முதல் நாளிலேயே இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 'அருள்வான்' திரைப்படம் உலகளவில் முதல் நாளில் சுமார் ரூ.44 லட்சம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக வார இறுதி நாட்களின் செயல்பாடே அவற்றின் அடுத்தகட்ட வெற்றியை தீர்மானிக்கும் என திரையுலக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.