7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?

First Published Aug 18, 2022, 3:10 PM IST

தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

dhanush - anirudh

தனித்துவமான இசையமைப்பால்  இளைஞர்களை தன்வசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். இவரின் தந்தை ரவி ராகவேந்திராவும் திரை பிரபலமானார். ஒரு வகையில் இவர்கள் ரஜினிகாந்தின் உறவினர்கள் என சொல்லப்படுகிறது. அந்த இன்ஃபுலியன்ஸில் தான்  நடிகராவார் இசைத்துறையில் நுழைந்தாரம் அனிருத். 

இன்று வரை  பல சாதனைகளைப் படைத்த அனிருத் ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் முதன்முறையாக தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  தான் இயக்கியிருந்தார். மேலும்  மூன்று படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார் சிவகார்த்திகேயன். 

dhanush - anirudh

அடுத்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த எதிர்நீச்சல் படத்தில் இசையமைத்திருந்தார் அனிருத். இதைத்தொடர்ந்து பாலிவுட் படமான டேவிட் படத்திற்கும் இசையமைக்க சென்ற இவர் வணக்கம் சென்னை, இரண்டாம் உலகப்போர், வேலையில்லாத பட்டதாரி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் இசை அமைத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது

அதே வருடம் கத்தி, காக்கி சட்டை என நான்கு படங்களிலும், 2015 மாரி, நானும் ரவுடிதான், வேதாளம், தங்க மகன் என நான்கு படங்களும் என வருடத்திற்கு நான்கு படங்களாவது தன் கைவசம் வைத்திருந்தார் இதில் தனுசுடன்3, வேலையில்லாத பட்டதாரி, மாரி , தங்க மகன் உள்ளிட்ட வருடத்திற்கு ஒரு படங்களில் ஆவது பணியாற்றி விடுவார்.

dhanush - anirudh

இதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த கூட்டணி அமையவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த அனிருத். 2016 ஆம் ஆண்டு ரெமோ, 17ஆம் ஆண்டு வேலைக்காரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களுக்கு இசையமைத்தார்.

பின்னர் சிவகார்த்திகேயனின் ஆசானான நெல்சன் இயக்கத்தில் வரும் அனைத்திற்கும் இவர் தான் ஆஸ்தான இயக்குனர்.  கோலமாவு கோகிலா,  டாக்டர். பீஸ்ட் தற்போது ஜெயிலர்என  அனைத்து படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.

மேலும் செய்திகளுக்கு...அட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே..சினேகாவின் சூப்பர் கூல் போட்டோஸ்...

dhanush - anirudh

பின்னர் சிவகார்த்திகேயனின் ஆசானான நெல்சன் இயக்கத்தில் வரும் அனைத்திற்கும் இவர் தான் ஆஸ்தான இயக்குனர்.  கோலமாவு கோகிலா,  டாக்டர். பீஸ்ட் தற்போது ஜெயிலர்என  அனைத்து படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.

இவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை கலவையால் ரசிகர்களை வசிகரித்து வருகிறார். அதோடு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ இவரின் இசையமைப்பில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையும் உருவாகி விட்டது. அதோடு  ராக்ஸ்டார்  என ரசிகர்களால் புகழப்படும் இவரது இசையில் உணர்ச்சிகள் அதிக அளவில் இருக்கும் எனவும் போற்றப்படுகிறது..

மேலும் செய்திகளுக்கு...கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்...அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்யும் சூரி..

dhanush - anirudh

பாடல்களில் வரும் வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறதோ.. இல்லையோ ஆனால் இவரது இசைக்கு ஆடாத மனிதர்களே  இருக்க மாட்டார்கள் என்னும் அளவிற்கு புகழ் பெற்றது இவரது இசை. அதன்படி பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்துப்பாடலின் வார்த்தைகள் பலருக்கும் புரியாவிட்டாலும். இதனை ரீல்ஸ் செய்யாதவர்கள் இருக்க மாட்டார்கள். 

dhanush - anirudh

முன்னதாக கமலின் விக்ரம் படம் இவர் இசையில் தூள் கிளப்பியது. தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் இசையமைத்துள்ளார் அனிருத். தங்க மகனுக்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒன்றிணையாததனுஷ் மற்றும் அனிருத் கம்போ திருச்சிற்றம்பலத்தில் இணைந்துள்ளது. இசை உலகின் உச்சத்திற்குசென்றுவிட்ட இசையமைப்பாளர் உடனான மனக்கசப்பை தனுஷ் உதறிவிட்ட காரணத்தால் தான் இந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதா ஒரு பக்கம் கூறப்பட்டுகிறது.

இருந்தும்  தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.

click me!