திறமை இருந்தால் எப்படியும் சினிமா துறையில் ஜெயித்து காட்ட முடியும் என்பதற்கு மிக பெரிய உதாரணம், தற்போது இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் மிருணாளினி ரவி. டப்ஸ்மேஷ் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் ரீல் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் மிருணாளினி.
அந்த வகையில் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்த வேலையை விட்டு விட்டு, சினிமா துறையில் நடிக்க முடிவு செய்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு ஏலியனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க துவங்கியது.
விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில், சில காட்சிகளில் மட்டுமே மிருணாளினி நடித்திருந்தாலும், 'டம் டம்' பாடலும், அதில் இவர் போட்ட ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.