தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்தவர் சினேகா. அவர் 2000 ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் பல பிரபல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் டாப் டென்னிற்கு வந்த சினேகா புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.