அவ்வப்போது திருமண சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் கீர்த்தி சுரேஷ், இப்படிப்பட்ட வதந்திகளை காதில் கூட வாங்கி கொள்ளாமல், தொடர்ந்து தன்னுடைய திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கைவசம் மூன்று படங்கள் உள்ளன.
தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து, தெலுங்கில்... அஜித்தின் 'வேதாளம்' படத்தின் ரீ-மேக்காக சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும், 'போலா ஷங்கர்' என்கிற படத்தில், லட்சுமி மேனன் ஏற்று நடித்த, தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். அதே போல் நானிக்கு ஜோடியாக 'தசரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: 'திருச்சிற்றம்பலம்' படத்தை மகன்களுடன் சேர்ந்து ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ... பார்த்த நடிகர் தனுஷ்!
'மகாநடி' படத்தின் வெற்றிக்கு பிறகு, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அப்படி நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால்... மீண்டும் முன்னனி நடிகர்களுக்கு ஜோடிபோடும் வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது... பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, அதீத கவர்ச்சியில் கிளி பச்சை நிற கோட், கழுத்து நிறைய நகைகள் அணிந்து... டீப் கவர்ச்சி காட்டிய இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவரது இந்த புகைப்படங்களை பார்த்து கீர்த்தி உள்ளாடை அணிந்துள்ளாரா? என நெட்டிசன்கள் சந்தேகமாக கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.