சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் 'கயல்' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
26
அப்பாவை இழந்த கதாநாயகி, ஒரு செவிலியராக வேலை செய்து... அதில் வரும் பணத்தை கொண்டு, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார். யாருடைய தயவும் இல்லாமல் தன்னுடைய குடும்பத்தையே காப்பாற்ற போராடும் கயல், தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என, அவருடைய பெரியப்பா பல முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் புஸ்வானமாக போகிறது.
மேலும் பொறுப்பில்லாத அண்ணன், தங்கைக்கு திருமணம், போலீசாக ஆசைப்படும் தம்பி, டாக்டருக்கு படிக்கும் தங்கை, தன்னுடைய குடும்பத்துக்காக உழைக்கும் கயல் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனதை ஈர்க்கிறார்.
46
போதாததற்கு, எழிலுக்கு கயல் மேல் உள்ள காதலால்... எழிலின் அம்மாவின் கோபத்திற்கும் ஆளாகிறார். கயலை எப்படியாவது அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் உமா ரியாஸ். மருத்துவமனையில், கெளதம் எண்ர்கிற மருத்துவரும் கயலை கேவலப்படுத்த வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இப்படி கயலுக்கு எதிராக பல பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சமாளிக்கும் தைரியமான பெண்ணாக நடிக்கிறார் சைத்ரா ரெட்டி.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், கயலின் தம்பியாக அன்பு கதாபாத்திரத்தில் ஏற்கனவே அவினாஷ் நடித்து வந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அவர் மாற்றப்பட்டார்.
66
அவர் வெளியேறிய பின்னர்... ஹரி என்பவர் நடித்து வந்த நிலையில், தற்போது அவரும் வெளியேறியுள்ளார். அவருக்கு பதில் ஜீவா என்கிற நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஜீவா நடிக்கும் எபிசோட் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.