மலையாள திரையுலகில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் நாட்டில் எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் மாளவிகா மோகனன்.
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் மாளவிகா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இப்படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் மனதில் பதியும்படி இருந்தது.
இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தற்போது சியான் விக்ரமின் 61-வது படமான தங்கலானில் நடித்து வருகிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் மாளவிகா.
இவ்வாறு தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் மாளவிகா, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.