விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு... காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்

Published : Nov 25, 2022, 01:43 PM IST

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்புவும் பணியாற்றி உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

PREV
14
விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு... காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தை பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

24

வாரிசு படத்தை வருகிற ஜனவரி மாதம் 12ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். நடிகர் அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக வாரிசு திரைப்படம் ரிலீசாக உள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் - அஜித் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இரண்டு படங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... தொடர் தோல்வியில் இருந்து சந்தானத்தை மீட்டதா ஏஜெண்ட் கண்ணாயிரம்? - டுவிட்டர் விமர்சனம் இதோ

34

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் அவரது இசையில் நடிகர் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் ரிலீசாகி தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்பாடல் யூடியூபில் 65 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

44

அதன்படி இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி உள்ளதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் தான் இந்த பாடல் பதிவு நடைபெற்றதாகவும், அடுத்த மாதம் இப்பாடலை படக்குழு வெளியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ‘ரஜினிமுருகன் 2’ கதை ரெடி.. சிவகார்த்திகேயனுக்கு டபுள் ஆக்‌ஷன் - இயக்குனர் பொன்ராம் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories