தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஆர்.கே என்று அழைக்கப்பட்டு இவர், தமிழில் விஜய்யின் ஜில்லா, பாலா இயக்கிய அவன் இவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் ஆர்.கே.
24
இவரது வீட்டில் கடந்த நவம்பர் 10-ந் தேதி கொள்ளைச்சம்பவம் அரங்கேறியது. நடிகர் ஆர்.கே. வேலை காரணமாக வெளியே சென்றபோது, விட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதையடுத்து அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவர்கள் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்த நேபாளை சேர்ந்த இளைஞர் தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து நடிகர் ஆர்.கே. போலீஸில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரை ஏற்ற போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
44
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 150 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள நகைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.