சன் டிவியில் பல சீரியல்கள், பெண்களின் கதாபாத்திரத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல்.
ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும், தொழிலதிபராக மாறி பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் குலசேகரன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் ஜனனிக்கு பல அதிர்ச்சிகள் கார்த்திருக்கிறது. தனக்கு நடக்கும் அனைத்தையும் சக்திக்காக பொறுத்து கொள்ளும் ஜனனி, கணவரே தன்னை சந்தேகப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என முடிவு செய்கிறார்.
மேலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஜனனியின் தந்தையாக நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெளியேறி உள்ளார்.