பலரின் பாவத்தை சம்பாதித்தால் இப்படி ஆகிடுச்சுனு தோணுது? உடல் நலம் குறித்து முதல் முறையாக பேசிய வேணு அரவிந்த்!

First Published | Nov 23, 2022, 10:01 PM IST

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பிரபலமான நடிகர் வேலு அரவிந்த், முதன்முறையாக தன்னுடைய உடல் நலம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்,
 

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான 'பகல் நிலவு' படத்தின் மூலம்.. 1985 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் வேணு அரவிந்த். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்று தந்தது என்னவோ சீரியல்கள் தான்.

அந்த வகையில் இவர் நடித்த அலைகள், செல்வி, வாணி ராணி, அரசி, சந்திரகுமாரி, போன்ற 20க்கும் மேற்பட்ட  சீரியல்கள் ரசிகர்கள் மனதில் தற்போது வரை நீங்காமல் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சின்னத்திரை தொடர்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் வேணு அரவிந்த். அதேபோல் வெள்ளி திரையில் நரசிம்மா, அலைபாயுதே, போன்ற முக்கிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித்தை திடீர் என சந்தித்த சிவகார்த்திகேயன்! மேட்சிங்... மேட்சிங் உடையில் பட்டையை கிளப்பும் வைரல் புகைப்படம்!


இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்ற நிலையில் அதில் இருந்து மீண்டார். பின்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்பு மூளையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து, அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். இதற்காக வேணு அரவிந்த சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக சில தகவல்கள் வெளியாகின. 

இந்த தகவல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து 'வாணி ராணி' சீரியலில் வேணு அரவிந்துக்கு மகனாக நடித்த, அருண்குமார் ராஜன்... வேணு அரவிந்த் கோமா நிலைக்கு செல்லவில்லை என்றும், அவர் நல்லபடியாக உள்ளார் என தெரிவித்தார்.

Vijay: கார் விஷயத்தில் விதிகளை மீறிய விஜய்! அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு..!

எனவே வேணு அரவிந்த் உடல்நிலை பற்றிபரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார். தற்போது பூரண குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பி உள்ள வேணு அரவிந்த் முதல் முறையாக தன்னுடைய உடல்நிலை குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் தலையில் சின்ன கட்டி மட்டுமே இருந்ததாகவும், அது அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளேன். இனிமேல் நடக்கப் போகிறது என்ன என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, இனி நடந்ததை நினைத்து பார்க்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் நிறைய வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பலரின் பாவத்தை சம்பாதித்ததால் தான் என்னவோ, இப்படி எல்லாம் தனக்கு நேர்ந்து விட்டது என நினைக்கத் தோன்றுவதாக வேணு அரவிந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவிற்கு குழந்தை பிறந்தது..! புகைப்படத்தோடு வெளியான தகவல்! குவியும் வாழ்த்து..!

இவருடைய பேட்டியை பார்த்த ரசிகர்கள்...  நீங்கள் வில்லத்தனமான நடிப்பிலும் கூட உங்களுடைய திறமையை நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளீர்கள், இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

Latest Videos

click me!