நடிகர் விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில் அவர் கலந்து கொள்ள வந்த காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரின் விளைவாக தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம்... தன்னுடைய ரசிகர்களையும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள விஜய்... கடந்த 20 தேதி அன்று வழக்கம் போல் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசியது மட்டும் இன்றி புகைப்படமும் எடுத்து கொண்டார்.
அதே போல் பண உதவி செய்யமுடியாவிட்டாலும், உங்களால் முடிந்தவரை சமூக சேவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டதுடன், நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து கொண்டுள்ளார்.