சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான, பிரியமானவளே மற்றும் கண்மணி போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபி நவ்யா. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கெரியரை தொலைக்காட்சியில் துவங்கி, பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான சீரியல் நடிகர் தீப்பக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தீபக் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களில் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் போட்டுள்ள பதிவில் கடவுள் நம் மீது பொழிந்த கருணையின் காரணமாக விலைமதிப்பில்லாத பரிசு நமக்கு கிடைத்துள்ளது. நர்ஸ் தன் கையில் குழந்தையை வைத்த போது நான் உயிருடனும், உச்சாகத்துடனும் உணர்தேன். அனைவருடைய ஆசீர்வாதமும், பிரார்த்தனையும் தங்களுக்கு தேவை என கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களின் தீபக் - அபி நவ்யா தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..!