கன்னட திரையுலகில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசானது. இப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் காந்தாரா திரைப்படத்தையும் தயாரித்து இருந்தது.
24
மலைவாழ் மக்களான பழங்குடியினரின் வாழ்க்கையையும், கொண்டாட்டத்தையும், அவர்களின் தெய்வ வழிபாட்டையும் பிரதீபலித்த காந்தாரா, நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலக்கிழார்களின் சாதிய ஒடுக்குறைக்கு பழங்குடியினர் ஆளாவதும், அவர்களது தேவைக்காக ஏமாற்றப்படுவதும், பலியாவதும் என ஒடுக்கப்பட்டோரின் போராட்டத்தையும் வலியையும் ஆணித்தனமாக பதிவு செய்திருந்தது இப்படம்.
ஆரம்பத்தில் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட காந்தாரா படத்துக்கு பிற மாநிலங்களிலும் கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழு, இப்படத்தை தமிழ் உள்பட பிற மொழிகளிலும் டப் செய்து கடந்த மாதம் வெளியிட்டது படக்குழு. இதன்மூலம் அதிகப்படியான வசூலை ஈட்டத்தொடங்கிய காந்தாரா சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியது.
திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியதோடு, இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக வழங்கினார். 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா தற்போது உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
44
16 கோடி என்கிற சிறிய பட்ஜெட்டில் உருவான காந்தாரா ரூ.400 கோடிவரை வசூல் செய்துள்ளது திரைத்துறையினரை மலைக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் அதிக வசூலை ஈட்டியதாக கூறப்பட்ட கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் ரூ.155 கோடி வசூலைக் கடந்துள்ள காந்தாரா திரைப்படம், தற்போது ரூ.160 கோடி வசூல் செய்து, கர்நாடகாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.