ஆராய்ச்சி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் வாரிசு பட பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : “விஜய்யும், அஜித்தும் பெரிய ஹீரோக்கள். அதில் விஜய் படத்துக்கு 300 தியேட்டரும், அஜித் படத்துக்கு 800 தியேட்டர்லாம் கொடுக்க மாட்டாங்க. அது மனசாட்சி இல்லாத செயல். இரண்டு படங்களுக்கும் 50 சதவீத தியேட்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும்.