தற்போது விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய் உட்பட, முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'வாரிசு' படம் குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் அங்கு சென்றதாகவும், அப்போது செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மெற்கொண்டனர். மேலும் படக்குழு தளத்தில் இருந்தவர்களிடம் இருந்து செய்தியாளர்களை மீட்டதுடன், செய்தியாளர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவுமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையையில், இந்த விஷயத்தில் செய்தியாளர்கள் மீதும் தவறு உள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. 'வாரிசு' படத்தின், படப்பிடிப்பை ட்ரோன் கேமிராவை வைத்து, தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்கள் படம் பிடித்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்த படக்குழு ட்ரோன் கேமிராவைய் பின்தொடர்ந்த போது அதனை இயக்கியவரை பிடித்து விசாரித்துள்ளனர். இது குறித்து அவரிடம் காரணம் கேட்ட போது... பத்திரிகை சுதந்திரம் என வரம்பு மீறி பேசியதால், சிலர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..!
அதே நேரம், விலங்குகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தும் போது... அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டதா? இல்லையா என்பதை விசாரிக்க வேண்டியது அரசாங்கம் தானே தவிர, செய்தியாளர்கள் இல்லை என நெட்டிசன்களும் சாடிய வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.