தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.